அறிவியல் கண்டுபிடிப்பில் அரசு பள்ளி மாணவிகள் அசத்தல்


அறிவியல் கண்டுபிடிப்பில் அரசு பள்ளி மாணவிகள் அசத்தல்
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

அறிவியல் கண்டுபிடிப்பில் அரசு பள்ளி மாணவிகள் அசத்தல்

கோயம்புத்தூர்

ஆனைமலை

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தனியார் கல்லூரி இணைந்து 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கோவைி்ல் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன. மாணவ -மாணவிகள் அறிவியல் கண்டுபிடிப்புகளை பற்றியும் அதன் செயல்பாடுகள் குறித்தும் விளக்கம் அளித்தனர். இதில் சிறந்த கண்டுபிடிப்புகளான ஆனைமலை வி .ஆர். டி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பார்வையற்றவர்களுக்கான கருவிகளும், கோவில் நிலங்களில் காடு வளர்த்தல் கருவிகளையும் கண்டுபிடித்து அதற்கு சிறந்த விளக்கம் மற்றும் அதன் செயல்பாடுகளும் குறித்து பேசினர். ரிவானா, பாத்திமா, பிரவீனா, ஷாலினி, வசுந்தரா ஆகிய மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. அறிவியல் கண்டு பிடிப்பில் அசத்திய மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் நந்தினி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்


Next Story