மணிமுத்தாறு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை


மணிமுத்தாறு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
x

மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவில் மணிமுத்தாறு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

திருநெல்வேலி

அம்பை:

பள்ளிக்கல்வி துறை சார்பில் பள்ளிகளுக்கு இடையே அம்பை வட்டார அளவில் கலைத்திருவிழா நடந்தது. இதில் மணிமுத்தாறு அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில் 75 மாணவ-மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர். அவர்களில் 17 பேர் முதல் பரிசு, 10 பேர் 2-ம் பரிசு உள்பட மொத்தம் 93 பரிசுகள் பெற்றனர். இதையடுத்து மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் 16 பேர் 2-ம் மற்றும் 3-ம் பரிசுகள் பெற்று சாதனை படைத்தனர். அவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சீ.விஜயகுமார் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள் பாராட்டினர்.


Next Story