பெத்தநாயக்கனூரில் சமூக வலைத்தளங்கள் மூலம் புத்தகம் தானம் கேட்கும் அரசு பள்ளி மாணவர்கள்
பெத்தநாயக்கனூரில் புத்தகத்தை தானமாக வழங்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்கள் மூலம் மாணவ-மாணவிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள்.
பொள்ளாச்சி
பெத்தநாயக்கனூரில் புத்தகத்தை தானமாக வழங்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்கள் மூலம் மாணவ-மாணவிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள்.
வேண்டுகோள்
பொள்ளாச்சி அருகே பெத்தநாயக்கனூரில் அரசு உயர்நிலபை்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கற்றலுடன், திறன்பட கேள் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவ- மாணவிகளின் வாசிப்பு திறனை அதிகரிக்க நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வருகிற 23-ந்தேதி உலக புத்தக தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி புத்தகங்களை பள்ளிக்கு தானமாக வழங்குமாறு சமூக வலைதளங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். மேலும் மாணவ- மாணவிகளும் புத்தகங்களை தானமாக பெற்று பள்ளி நூலகத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து பள்ளியின் தமிழாசிரியர் பாலமுருகன் கூறியதாவது:- கொரோனா தொற்று காலத்திற்கு பிறகு பள்ளி குழந்தைகளிடம் வாசித்தல், எழுதுதல் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. மேலும் செல்போன் இல்லாமல் குழந்தைகள் இருப்பதில்லை. இதனால் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றது. இந்த நிலையை மாற்ற புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
பெத்தநாயக்கனூரில் புத்தகத்தை தானமாக வழங்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்கள் மூலம் மாணவ-மாணவிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள்.
இதனால் குழந்தைகளின் படிப்பிற்கும், பிழையின்றி பேசவும், எழுதவும், வாசிக்கவும் முடியும். பேரிடர் காலத்திற்குப் பின்பு குழந்தைகளிடம் வாசித்தல் மற்றும் எழுதுதல் பழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. அலைபேசிகளுக்கு குழந்தைகள் அடிமைகள் போல நடந்து கொள்கின்றனர்.
இந்த நிலை மாற புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்துதல் கட்டாயமாக உள்ளது. உலக புத்தக தினத்தையொட்டி எங்கள் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகங்களை தானமாக கொடுத்து உதவ வேண்டும் என்று சமூக வலைதளங்கள் மூலமாகவும், நேரில் சென்றும் வலியுறுத்தி வருகிறோம். மேலும் பழைய புத்தகம் அல்லது புதிய புத்தகம் எதுவாக இருந்தாலும் கொடுத்து உதவுங்கள். செல்போனில் தொடர்பு கொண்டால் 40 கிலோ மீட்டர் தூரத்திற்குள் இருந்தால் நானே நேரில் சென்று தானமாக பெற்றுக் கொள்கிறேன். மேலும் வெளியூரில் இருந்தால் பள்ளி முகவரிக்கு அனுப்பி குழந்தைகளின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க உதவலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.