அரசு பள்ளி மாணவர்கள் மாநில சிலம்பம் போட்டிக்கு தகுதி


அரசு பள்ளி மாணவர்கள் மாநில சிலம்பம் போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 3 Nov 2022 1:00 AM IST (Updated: 3 Nov 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளி மாணவர்கள் மாநில சிலம்பம் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

தர்மபுரி

அரூர்:-

தர்மபுரி மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் தர்மபுரியில் நடந்தது. இதில் ஜூனியர் பிரிவில் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் அப்துல் ரகுமான், சீனியர் பிரிவில் பாசில் ஆகியோர் முதலிடம் பிடித்து மாநில அனவிலான போட்டிக்கு தகுதி ெபற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிதுரை, சங்கர், முருகேசன், வெங்கடாலம் ஆகியோரையும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துகுமார், பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


Next Story