'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இட ஒதுக்கீட்டில் சேர 24 மாணவர்கள் தகுதி பெற்றனர்.
புதுக்கோட்டை
மருத்துவப்படிப்பிற்கான 'நீட்' நுழைவுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 912 பேர் 'நீட்' தேர்வு எழுதினர். இதில் 300 மதிப்புகளுக்கு மேல் 4 மாணவர்களும், 201-ல் இருந்து 299 வரை 16 மாணவர்களும், 100 முதல் 200 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் 128 பேரும், 90 முதல் 100 வரை மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் 33 மாணவர்களும், 90 மதிப்பெண்களுக்கு கீழ் 674 மாணவர்களும் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 24 மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர தகுதி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 34 மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story