நெல் உலர்த்தும் கருவியை அரசே அமைத்து தர வேண்டும்


நெல் உலர்த்தும் கருவியை அரசே அமைத்து தர வேண்டும்
x

நெல் உலர்த்தும் கருவியை அரசே அமைத்து தர வேண்டும்

நாகப்பட்டினம்

நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி ஓரளவு மகசூல் கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் நெல்லை அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும்போது அதிக ஈரப்பதத்துடன் நெல் உள்ளது என்று திருப்பி அனுப்பப்படுகின்றனர். வேதாரண்யம் பகுதி விவசாயிகள் தங்களது நெற்கதிர்களை அறுவடைசெய்து காய வைக்க எந்த கொள்முதல் நிலையத்திலும் நெல் உலர்த்தும் தளம் இல்லை. எனவே விவசாயிகள் நெல்மணிகளை கிராமப்புறத்தில் பல்வேறு இடங்களில் பிரதான போக்குவரத்து சாலைகளில் கொட்டி காய வைக்கின்றனர். தற்போது பருவநிலை மாற்றத்தால் அடிக்கடி மழை பெய்வதால் சாலைகளிலும் நெல்மணிகளை காயவைப்பதில் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல்லை காயவைக்கும் வகையில் நெல் உலர்த்தும் கருவியை அரசே அமைத்து தர வேண்டும். நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.


Related Tags :
Next Story