அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

திருவாரூரில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்விடுப்பு, வருங்கால வைப்பு நிதி, வட்டி குறைப்பு உள்ளிட்ட கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் அனைத்து மருந்தாளுநர் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், அரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன், சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் லதா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


Next Story