எட்டயபுரம் அருகே பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்


எட்டயபுரம் அருகே பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்
x

எட்டயபுரம் அருகே பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் வட்டம் மேலக்கரந்தை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடத்துவதற்காக கடந்த மாதம் 22-ந்தேதி முன்னோடியாக மனுக்கள் பெறப்பட்டன. இதில், கிராம மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 124 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 45 மனுக்கள் ஏற்கப்பட்டன. மீதமுள்ள 79 மனுக்கள் தீர்வு காணும் பொருட்டு நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், நேற்று மேலக்கரந்தை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. முகாமிற்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஜீ.வி.மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். 108 பயனாளிகளுக்கு ரூ.38.07 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில் எட்டயபுரம் தாசில்தார் கிருஷ்ணகுமாரி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரகுபதி, வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், மேலக்கரந்தை ஊராட்சி மன்ற தலைவர் முத்து முனியம்மாள், எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் விளாத்திகுளம் பேரூராட்சி 1,12 ஆகிய 2 வார்டு பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை தொடக்க விழா நடந்தது இந்த நிகழ்ச்சிக்கு விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அயன் ராஜ் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல், விளாத்திகுளம் தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நபார்டுக்கு திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தி.மு.க வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்


Next Story