டாஸ்மாக் கடைகளை மூடுவது அரசின் கொள்கை முடிவு: சென்னை ஐகோர்ட்டு
மனுதாரர்கள் தங்கள் குறைகளுக்கு அரசை அணுகி நிவாரணம் கோரலாம் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூட, டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஜூன் 20ந் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுநலனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவை எதிர்த்து நில உரிமையாளர்கள் வழக்கு தொடர முடியாது என்றார்.
மனுதாரர்கள் தங்கள் குறைகளுக்கு அரசை அணுகி நிவாரணம் கோரலாம் என்று கூறிய நீதிபதி, இது சம்பந்தமான முறையீட்டை பரிசீலித்து அரசு முடிவெடுக்கலாம் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து கட்டிட உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
Related Tags :
Next Story