அமைச்சரை நீக்க "கவர்னருக்கு அதிகாரம் இல்லை'' சட்ட ரீதியாக சந்திப்போம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


அமைச்சரை நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை சட்ட ரீதியாக சந்திப்போம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Jun 2023 2:42 PM GMT (Updated: 29 Jun 2023 3:40 PM GMT)

அமைச்சரை நீக்கும் அதிகாரம் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கிடையாது என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார் .

சென்னை,

தற்போது அமலாக்கதுறை வழக்கில் செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளார். செந்தில்பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும்.ஊழல் தொடர்பான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதை குறிப்பிட்டு தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். வேலைவாங்கி தருவதாக கூறி பணமோசடி உள்ளிட்ட குற்ற வழக்குகளை எதிர்க்கொண்டுள்ளார் செந்தில்பாலாஜி என குறிப்பிட்டுள்ளார்.

அமலாக்கத்துறை வழக்கை எதிர்கொள்ளும் செந்தில்பாலாஜி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.'

இந்த நிலையில் அமைச்சரை நீக்கும் அதிகாரம் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கிடையாது என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார் .

தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, இந்த நிகழ்ச்சி முடிந்து அவர் செல்லும்போது, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி 'டிஸ்மிஸ்' செய்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தபோது, "அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குவதற்கு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அதிகாரம் கிடையாது. இதனை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம்'', என்றார்.


Next Story