கவர்னர் ஆர்.என்.ரவியின் சித்தன்னவாசல் பயணம் திடீர் ரத்து
கவர்னர் ஆர்.என்.ரவியின் சித்தன்னவாசல் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் 7-ம் நூற்றாண்டை சேர்ந்த குகை ஓவியங்கள், சமணர் படுகைகள் வரலாற்று சிறப்பு வாய்ந்தவை. இவற்றை மத்திய தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது. மேலும் அதேபகுதியில் தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வரும் படகு குழாம், அறிவியல் பூங்கா, சிறுகல் பூங்கா உள்ளிட்டவை உள்ளன. இங்கு தினசரி சுற்றுலாப்பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், புதுக்கோட்டை வழியாக காரைக்குடியில் இருந்து திருச்சி செல்லும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சித்தன்னவாசல் சுற்றுலாத்தலத்தை பார்வையிட இன்று வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சித்தன்னவாசலுக்கு செல்ல இருந்த கவர்னர் ஆர்.என்.ரவியின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.