காரல் மார்க்ஸ் குறித்த விமர்சனத்தை கவர்னர் திரும்ப பெறவேண்டும் -ராமதாஸ்


காரல் மார்க்ஸ் குறித்த விமர்சனத்தை கவர்னர் திரும்ப பெறவேண்டும் -ராமதாஸ்
x

காரல் மார்க்ஸ் குறித்த விமர்சனத்தை கவர்னர் திரும்ப பெறவேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஜெர்மனிய தத்துவ அறிஞர் காரல் மார்க்சின் கொள்கைகள் இந்தியாவுக்கு எதிரானவை; அவை இந்திய வளர்ச்சிக்கு தடையாக இருந்தன என்று கவர்னர் ரவி கூறியிருப்பது தவறு, கண்டிக்கத்தக்கது.

காரல் மார்க்ஸ் எந்த நாட்டுக்கும் எதிராக செயல்படவில்லை. அது அவரது கொள்கையும் அல்ல. காரல் மார்க்சின் கருத்துகளை கவர்னர் நன்றாக படிக்கவில்லை என்பதையே அவரின் கருத்துகள் காட்டுகின்றன.

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும் என்ற பொதுவுடைமைதான் காரல் மார்க்சின் கொள்கையாகும். அவரின் கொள்கைகளையும், மூலதனம் புத்தகத்தையும் உலகமே பாராட்டுகிறது. பா.ம.க.வின் கொள்கை வழிகாட்டிகளில் காரல் மார்க்சும் ஒருவர்.

காரல் மார்க்ஸ் குறித்து முழுமையாகப்புரிந்து கொள்ளாமல் கவர்னர் அவதூறுகளை பரப்பக்கூடாது. அது அவருக்கு வழங்கப்பட்ட பணியும் அல்ல. காரல் மார்க்ஸ் குறித்து தவறான தனது விமர்சனத்தை கவர்னர் திரும்பப்பெற வேண்டும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story