தான் படித்த பள்ளிக்கு சென்ற கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்; மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்


தான் படித்த பள்ளிக்கு சென்ற கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்; மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்
x

வடக்கன்குளத்தில் தான் படித்த பள்ளிக்கு நேற்று சென்ற புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

வடக்கன்குளத்தில் தான் படித்த பள்ளிக்கு நேற்று சென்ற புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

புதுச்சேரி கவர்னர்

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்துக்கு வந்தார்.

அங்கு தான் படித்த நேரு தேசிய மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற அவருக்கு மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர் தரையில் அமர்ந்து மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவ-மாணவிகள் நன்றாக கல்வி பயின்று தன்னை போன்று கவர்னராக வரவேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய கல்வி கொள்கை

இந்த பள்ளியில் நான் 3-ம் வகுப்பு வரை படித்தேன். கர்மவீரர் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தின் மூலம் உணவு உண்டு, பால் குடித்து இந்த பள்ளியில் வளர்ந்தேன்.

பிரதமர் மோடியின் புதிய கல்வி கொள்கையின்படி காலை மற்றும் மதிய உணவோடு கல்வி என்பதை பலரும் வரவேற்கின்றனர்.

பெண் குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்துவதற்கு காரணம் கழிவறை வசதி இல்லாததுதான்.

எனவே, தான் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிகளிலும் கழிவறை அமைக்கப்பட்டு வருகிறது.

தற்காப்பு கலை

குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் கல்வியை மேம்படுத்த வேண்டும். எந்த பிரச்சினையும் இல்லாமல் படித்து அவர்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். பள்ளி குழந்தைகளுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்றுவிக்க வேண்டும். காலை, மதிய உணவு வழங்குவது போன்று நல்ல நீதி போதனைகளையும் மாணவ-மாணவிகளுக்கு வழங்க அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வடக்கன்குளத்தில் உள்ள அதிசய விநாயகர் கோவிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.


Next Story