ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் கையெழுத்திட வேண்டும்-திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி


ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் கையெழுத்திட வேண்டும்-திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி
x

தமிழக சட்டசபையில் நிறைவேற்ற உள்ள ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் கையெழுத்திட வேண்டும் என திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியது கண்டனத்துக்குரியது. தமிழக சட்டசபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பினால் அவர் கட்டாயம் கையெழுத்திட வேண்டும். அண்ணாமலை பொறுப்பு உணர்ந்து பொதுவெளியில் பேச வேண்டும். அ.தி.மு.க.- பா.ஜனதா நாடகமாடுகிறது. அ.தி.மு.க.வை விட்டு பா.ஜனதா பிரிய முடியாது. பா.ஜனதாவை விட்டு அ.தி.மு.க. பிரிய முடியாது. இது இரண்டுமே இருவருக்கும் தெரியும். அவர்களுக்குள் தற்போது நாடகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தாமரை ஆட்சி மலரும் என்று நம்பிக்கை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story