தமிழக சட்டசபையில் கவர்னரின் செயல்பாடு ஏற்புடையதல்ல


தமிழக சட்டசபையில் கவர்னரின் செயல்பாடு ஏற்புடையதல்ல
x

தமிழக சட்டசபையில் கவர்னரின் செயல்பாடு ஏற்புதடையதல்ல என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

நாகப்பட்டினம்

தமிழக சட்டசபையில் கவர்னரின் செயல்பாடு ஏற்புதடையதல்ல என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்,.

கவர்னர் மூலம் ஆட்சி

நாகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. அரசு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறது. பா.ஜ.க. அனைத்து மாநிலங்களிலும் ஆள வேண்டும் என நினைக்கிறது. பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில், கவர்னர் மூலம் ஆட்சி நடத்த முயற்சி செய்துவருகிறது. மற்ற மாநிலத்தில் உள்ள கவர்னரை விட தமிழக கவர்னர் சர்ச்சையை உருவாக்குபவராக உள்ளார்.

கலவரத்தை உருவாக்க முயற்சி

தமிழகத்தில் அரசை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு முயற்சிகளை கவர்னர் கையாண்டு வருகிறார். தமிழக சட்டசபையில் கவர்னர் நடந்து கொண்ட விதம் ஏற்புடையதல்ல. தமிழகத்தில் கவர்னர் கலவரத்தை உருவாக்க வேண்டும் என முயற்சி ெசய்கிறார்..

கவர்னர் உரை அவரது ஒப்புதலுக்கு பிறகே அச்சிடப்படும். அப்படியிருக்கும் போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கவர்னருக்கு ஆதரவாக பேசுவது தவறு.தமிழ்நாடு என்ற பெயருக்கு வரலாறு உள்ளது. தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

24- ந்தேதி் சாலை மறியல்

தொழிலாளர்களுக்கு ஆதரவான 41 சட்டங்களை 4 பிரிவுகளாக பிரித்து, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மோடி அரசு செயல்படுகிறது. தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து வருகிற 24- ந்தேதி தமிழக முழுவதும் ஏ.ஐ.டி.யூ.சி, சார்பில் நடைபெறும் சாலை மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரவளிக்கும்.

திட்டங்களை செயல்படுத்த விவசாய நிலங்கள் தேவைப்படுகின்றன. நிலம் கையகப்படுத்தும் போது விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் அதிகபட்ச விலை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story