அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் மறியல்

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விரிவுரையாளரை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விரிவுரையாளரை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை செங்கம் சாலையில் கலைஞர் அரசு கலைக் கல்லூரி அமைந்து உள்ளது. இக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர் ஒருவர் மாணவிகளின் செய்முறை நோட்டில் கையெழுத்திடாமல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகள் நேற்று கல்லூரி முன்பு செங்கம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
அதன்பேரில் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






