அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
சோளிங்கர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 30-ந் தேதி தொடங்குகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. சிறப்பு பிரிவினரான மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை அந்தமான் நிக்கோபார் மாணவர்கள், பாதுகாப்பு படை வீரர்களின் வாரிசுகள் மற்றும் விதவைகள் ஆகியோருக்கு கலந்தாய்வு நாளை காலை 10 மணிக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
முதற்கட்ட மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 5-ந் தேதி பி.எஸ்சி கணினி அறிவியல் பாடப் பிரிவிற்கும், 6-ந் தேதி பி.காம் வணிகவியல், 7-ந் தேதி பி.ஏ ஆங்கிலத் துறைக்கும், 8-ந் தேதி பி.ஏ. தமிழ் துறைக்கும், 9-ந் தேதி பி.எஸ்சி கணிதத்திற்கும் என பாடவாரியாக சேர்க்கைகள் நடைபெறும்.
கல்லூரியில் இருந்து தரவரிசை மற்றும் இன சுழற்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு குறுஞ்செய்தி அழைப்பு மூலம் அழைக்கப்பட்ட மாணவர்கள் மட்டும் சேர்க்கை கலந்தாய்வுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) என்.சுஜாதா தெரிவித்துள்ளார்.