அரசு பஸ்-ஆட்டோ மோதல் பெண் படுகாயம்


அரசு பஸ்-ஆட்டோ மோதல் பெண் படுகாயம்
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் அரசு பஸ்-ஆட்டோ மோதல் பெண் படுகாயம்

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் அவரப்பாக்கம்பகுதியை சேர்ந்தவர் தேசிங்கு மனைவி விஜயலட்சுமி(வயது 55). இவர் சம்பவத்தன்று ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். பட்டணம் கால்நடை மருத்துவமனை அருகில் வந்தபோது எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க டிரைவர் ஆட்டோவை வலது பக்கம் திரும்பினார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் மீது ஆட்டோ மோதியது. இதில் படுகாயம் அடைந்த விஜயலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டிரைவர் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து ரோசணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story