நாங்குநேரி ஊருக்குள் வராதஅரசு பஸ் சிறைபிடிப்பு
நாங்குநேரி ஊருக்குள் வராத அரசு பஸ் சிறைபிடிக்கப்பட்டது.
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே உள்ள இளந்தோப்பு கிராமத்தை சேர்ந்த ஒருவர் நேற்று நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரிக்கு அரசு பஸ் ஒன்றில் வந்தார். அப்போது அந்த பஸ் கண்டக்டர் ஒன் டு ஒன் என கூறி அவருக்கு நாங்குநேரிக்கு டிக்கெட் கொடுக்காமல் நெல்லைக்கு டிக்கெட் கொடுத்துள்ளார்.
நாங்குநேரி பைபாஸ் வழியாக பஸ் வந்த போது அவர் தனது நண்பர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்ததை அடுத்து அவர்கள் நாங்குநேரி தாலுகா அலுவலகம் எதிரே நான்கு வழிச்சாலையில் அந்த பஸ்சை சிறைபிடித்தனர். பின்னர் டிப்போ கிளை அதிகாரியை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து கூறியுள்ளனர். அப்போது நாங்குநேரி சென்றுதான் அந்த பஸ் வர வேண்டும் என தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர் டிரைவர், கண்டக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நாளை முதல் முறையாக நாங்குநேரி ஊருக்குள் இந்த பஸ் வந்து செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பஸ்சை விடுவித்தனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.