திருமங்கலம் அருகே அரசு பஸ்-கார் மோதல்; 10 பேர் படுகாயம்


திருமங்கலம் அருகே அரசு பஸ்-கார் மோதல்; 10 பேர் படுகாயம்
x

திருமங்கலம் அருகே அரசு பஸ்-கார் மோதலில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே அரசு பஸ்-கார் மோதலில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

அரசு பஸ்-கார் மோதல்

மதுரை வாடிப்பட்டி மற்றும் முத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒரு காரில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை அடுத்த அழகாபுரி பகுதியில் உள்ள ஒரு கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு நேற்று சென்றனர். பின்னர் மதுரை நோக்கி அதே காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டி பகுதியில் வந்தபோது எதிரே மதுரையில் இருந்து செங்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் ேநரத்தில் காரும், அரசு பஸ்சும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் பயணிகள் அலறினார்கள். இந்த விபத்தில் காரும், பஸ்சும் பலத்த சேதமடைந்தன.

10 பேர் படுகாயம்

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த டிரைவர் ரவிச்சந்திரன், கண்டக்டர் மாரிமுத்து மற்றும் பயணிகள் 3 பேர், காரில் வந்த ஜெயந்தி (வயது 47), நடராஜன் (61), பிரேமா (58), சரஸ்வதி மற்றும் கண்ணன் ஆகிய 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 3 பேர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story