அரசு பஸ்-மினி லாரி மோதல்; 4 பேர் காயம்
திசையன்விளையில் அரசு பஸ்-மினிலாரி மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர்.
திருநெல்வேலி
திசையன்விளை:
திசையன்விளை அரசு பணிமனையில் இருந்து திருச்செந்தூர் செல்வதற்காக அரசு பஸ் வெளியே வந்தது. முக்கூடல் அண்ணாநகரை சேர்ந்த குமார் (வயது 47) பஸ்சை ஓட்டினார். பணிமனையில் இருந்து சிறிது ெதாலைவில் சென்றபோது, அரசு பஸ்சும், எதிரே வந்த மினிலாரியும் மோதிக் கொண்டன. இதில் பஸ் கண்டக்டர் சிவந்தியாபுரம் முத்துக்குமார் (36), மினி லாரி டிரைவர் பணகுடி சிவகாமிபுரம் ராமதாஸ் (32) மினி லாரியில் பயணம் செய்த அதே ஊரைச் சேந்த ரமேஷ், ஜாண்சன் ஆகியோர் காயம் அடைந்தனர். இதுகுறித்து பஸ் டிரைவர் குமார் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story