அரசு பஸ்சை 2 முறை இயக்க வேண்டும்
அரசு பஸ்சை 2 முறை இயக்க வேண்டும் என மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆற்காடு பணிமனைக்கு உட்பட்ட தடம் எண்:487 அரசு பஸ் வேலூரில் இருந்து அரக்கோணம் வரை தினமும் காலை, மாலை என 2 முறை இயக்கப்பட்டது. கொரோனாவுக்கு பிறகு அந்த பஸ் காலை ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. மாலையில் இயக்கப்படுவது இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே இயக்கியபடி காலை, மாலை என 2 முறை பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ- மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire