அரசு கேபிள் டி.வி. சம்பந்தமான அனைத்து வழக்கு விவரங்களையும் தாக்கல் செய்யுங்கள்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


அரசு கேபிள் டி.வி. சம்பந்தமான அனைத்து வழக்கு விவரங்களையும் தாக்கல் செய்யுங்கள்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

அரசு கேபிள் டி.வி. சம்பந்தமான அனைத்து வழக்கு விவரங்களையும் தாக்கல் செய்யுங்கள் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


கரூர் மாவட்டத்தை சேர்ந்த நேரு, கடந்த 2017-ம் ஆண்டில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் கேபிள் டி.வி. ஆபரேட்டராக உள்ளேன். எனது வாடிக்கையாளர்களுக்கு கேபிள் டி.வி. இணைப்பு வழங்குவதற்காக அமைக்கப்பட்டு இருந்த பைபர் ஒயர்களை சிலர் துண்டித்து, ஜங்ஷன் பெட்டிகளையும் அகற்றினர். இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை கோரி மனு அளித்தும் எந்த பலனும் இல்லை. என்னுடைய மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, 2017-ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு ஏன் இன்னும் நிலுவையில் வைக்கப்பட்டு உள்ளது? என கேள்வி எழுப்பினார்.

பின்னர், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு எதிராக 2019-ம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளின் விவரங்களை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. இயக்குனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, இந்த வழக்கை ஒத்திவைத்தார்.


Next Story