அரசு மகளிர் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்
அரசு மகளிர் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை அரசு மகளிர் கலை கல்லூரியில் 2023-2024-ம் கல்வியாண்டில் பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.பி.ஏ. உள்ளிட்ட முதலாம் ஆண்டு பட்டபடிப்பு வகுப்புகளில் சேர விரும்பும் மாணவிகள் இன்று(திங்கட்கிழமை) முதல் வருகிற 19-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.48-ம், பதிவு கட்டணமாக ரூ.2-ம் செலுத்த வேண்டும். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் மாணவிகள் www.tngasa.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story