அரசு கல்லூரி பேராசிரியருக்கு அடி உதை; காதலை பெற்றோரிடம் சொன்னதால் ஆவேசம்


அரசு கல்லூரி பேராசிரியருக்கு அடி உதை; காதலை பெற்றோரிடம் சொன்னதால் ஆவேசம்
x

கோவில்பட்டியில் உள்ள அரசு கல்லூரி பேராசிரியரை தாக்கிய நான்கு மாணவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை பிரிவு தலைவராக பணியாற்றி வரும் பேராசிரியர் சிவசங்கரன் என்பவரை நான்கு மாணவர்கள் அடித்து உதைத்ததாக பேராசிரியர் புகார் பேராசிரியர் சிவசங்கரன் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்குஅனுமதி

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை பிரிவு தலைவராக பேராசிரியர் சிவசங்கரன் செயல்பட்டு வருகிறார். அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவரும் ஒரு மாணவியும் பேசி வருவதை பேராசிரியர் சிவசங்கரன் கண்டித்ததாகவும் மேலும் இதுகுறித்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலையில் பேராசிரியர் சிவசங்கரன் தனது துறை பிரிவு அலுவலகத்தில் இருந்தபோது நான்கு மாணவர்கள் தன்னை தாக்கியதாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் நான்கு மாணவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேராசிரியர் சிவசங்கரன் கோவில்பட்டி அரசு அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இரண்டு மாணவர்களை கல்லூரி நிர்வாகம் தற்காலிக இடைநீக்கம் செய்துள்ளது. இதே போல் பேராசிரியர் சிவசங்கரன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story