அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்


அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
x
தினத்தந்தி 23 Sept 2022 12:15 AM IST (Updated: 23 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தினை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

ராமநாதபுரம்

பழைய ஓய்வூதிய திட்டத்தினை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

தற்செயல் விடுப்பு போராட்டம்

தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும், மத்திய அரசு அறிவித்ததை போன்று 3 சதவீத அகவிலைப்படியை ரொக்கமாக வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் நேற்று தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு போராட்டக்குழுவின் சார்பில் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சோமசுந்தர், பொருளாளர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் 512 ஊழியர்கள் தற்செயல்விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அலுவலகங்கள் வெறிச்சோடின

இதன் காரணமாக அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக வளர்ச்சி பிரிவு அலுவலகம் உள்ளிட்டவை வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல கருவூலத்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களின் ஊழியர்களும் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.


Related Tags :
Next Story