அரசு பணியாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் 25-ந் தேதி(வியாழக்கிழமை) கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
வெளிப்பாளையம்:
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் 25-ந் தேதி(வியாழக்கிழமை) கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
மண்டல குழு கூட்டம்
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மண்டல குழு கூட்டம் நாகையில் நடந்தது. கூட்டத்திற்கு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் மகேந்திரன், துணைத்தலைவர் இளமதி, மாவட்ட செயலாளர் சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில பொருளாளர் பிரகாஷ், நியாய விலை கடை மாநில துணைத்தலைவர் டாஸ்மாக் கோவிந்தராஜ், ஊராட்சி் கலை பணியாளர் சங்கம் அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
25-ந் தேதி ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க பதாகை அணிந்து கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 25-ந் தேதி(வியாழக்கிழமை) நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன