குட்டத்துக்கு அரசு விரைவு பஸ் சேவை தொடக்கம்
ஊட்டியில் இருந்து குட்டத்துக்கு அரசு விரைவு பஸ் சேவை தொடங்கப்பட்டது.
ஊட்டி,
சர்வதேச சுற்றுலா தலமான ஊட்டியின் அழகை ரசிக்கவும், குளிர்ந்த சீதோஷ்ண காலநிலையை அனுபவிக்கவும் ஆண்டுதோறும் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதையடுத்து தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், ஊட்டியில் இருந்து அரசு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஊட்டியில் இருந்து சென்னைக்கு 4 பஸ்கள், செங்கோட்டைக்கு 3 பஸ்கள், புதுச்சேரிக்கு ஒரு பஸ், கன்னியாகுமரிக்கு 3 பஸ்கள், பாபநாசத்துக்கு ஒரு பஸ், திருச்செந்தூர் மற்றும் வேளாங்கண்ணிக்கு தலா ஒரு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஊட்டியில் இருந்து நெல்லை மாவட்டம் குட்டம் பகுதிக்கு அரசு விரைவு பஸ் சேவை தொடங்கி உள்ளது. கோவை, பொள்ளாச்சி, உடுமலை வழியாக செல்கிறது. நேற்று முதல் புதிய பஸ் சேவை தொடங்கியது. தினமும் மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7 மணிக்கு செல்கிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.