அரசு விரைவு பஸ் பழுதாகி நிறுத்தம்


அரசு விரைவு பஸ் பழுதாகி நிறுத்தம்
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர்-கன்னியாகுமரி இயக்கப்படும் அரசு விரைவு பஸ் அடிக்கடி பழுதாகி நிறுத்தப்படுகிறது. இதனால் முன்பதிவு செய்த பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர்-கன்னியாகுமரி இயக்கப்படும் அரசு விரைவு பஸ் அடிக்கடி பழுதாகி நிறுத்தப்படுகிறது. இதனால் முன்பதிவு செய்த பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

விரைவு பஸ் நிறுத்தம்

கூடலூரில் இருந்து கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டைக்கு அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் கன்னியாகுமரி செல்லும் விரைவு பஸ்சில் போதிய பராமரிப்பு பணி மேற்கொள்வதில்லை என கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது. கூடலூரில் இருந்து விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோவில் செல்வதற்கு வேறு பஸ் கிடையாது.

இதனால் கூடலூர் பகுதியில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் குறிப்பிட்ட பஸ்சை மட்டுமே நம்பி உள்ளனர். சமவெளியில் இருந்து மலைப்பிரதேசத்துக்கு இயக்கப்படும் பஸ் போதிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. கடந்த 2 நாட்களாக கூடலூருக்கு விரைவு பஸ் வரவில்லை. இதனால் முன்பதிவு செய்த பயணிகள் உட்பட அனைவரும் அவதி அடைந்ததோடு, ஏமாற்றம் அடைந்தனர்.

பயணிகள் அவதி

மேலும் சில சமயங்களில் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்காக வந்திருந்த பயணிகள் பல பஸ்கள் மாறிச் செல்லும் நிலை ஏற்பட்டது. மீதமுள்ளவர்கள் கூடலூர் பஸ் நிலையத்தில் இருந்து ஊருக்கு செல்வதா அல்லது வீடு திரும்புவதா என்ற குழப்பத்தில் காத்து நின்றனர்.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, ஒரே ஒரு பஸ் கூடலூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. அதுவும் அடிக்கடி பழுதடைந்து நின்று விடுவதால் பல்வேறு சிரமங்களுடன் பயணம் செய்ய வேண்டிய நிலை தொடர்கிறது. தற்போது கூடலூர்-கன்னியாகுமரி இடையே அரசு விரைவு பஸ் பழுதாகி நிறுத்தப்பட்டு உள்ளதால் அவதியடைந்து வருகிறோம். இதுதொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.


Related Tags :
Next Story