அரசினர் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்கதிர்ஆனந்த் எம்.பி. வழங்கினார்


அரசினர் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்கதிர்ஆனந்த் எம்.பி. வழங்கினார்
x
தினத்தந்தி 12 Sep 2022 7:09 PM GMT (Updated: 12 Sep 2022 7:13 PM GMT)

அரசினர் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை கதிர்ஆனந்த் எம்.பி. வழங்கினார்

வேலூர்

குடியாத்தம்

அரசினர் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை கதிர்ஆனந்த் எம்.பி. வழங்கினார்

குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியிலும், எர்த்தாங்கல் ஊராட்சியில் உள்ள அரசினர் அரசினர் மேல்நிலைப் பள்ளியிலும் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் என்.அம்முநெடுஞ்செழியன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உத்தரகுமாரி, ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் தமிழரசி இளையராஜா, ஜி.மோகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உத்தரன், துணை தலைவர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர்கள் என்.எஸ்.அம்பிகா, டி.ஜெகநாதன் ஆகியோர் வரவேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கடராமன், அமலுவிஜயன் எம்.எல்.ஏ., தாசில்தார் எஸ்.விஜயகுமார், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் கள்ளூர்ரவி ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பு அழைப்பாளராக வேலூர் டி.எம்.கதிர் ஆனந்த் எம்.பி.கலந்து கொண்டு 2 பள்ளிகளைச் சேர்ந்த 114 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

தொடர்ந்து கதிர் ஆனந்த் எம்.பி. பேசுகையில், ''இந்தியாவிலேயே கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்பவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். அதனை பயன்படுத்தி பள்ளி மாணவர்களாகிய நீங்கள் சிறப்பாக கல்வி கற்று பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஊருக்கும் நற்பெயர் ஏற்படுத்தி தர வேண்டும்்'' என்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மஞ்சுளாவேல்முருகன், டி.பழனி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிட்டி பத்மநாபன், அணங்காநல்லூர் ஒன்றிய குழு உறுப்பினர் ரஞ்சித்குமார் உள்பட அதிகாரிகள், ஊராட்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் குடியாத்தம் நகராட்சி 36-வது வார்டில் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சியிலும் கதிர்ஆனந்த் எம்.பி. பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

அப்போது குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், நகரமன்ற உறுப்பினர் ம.மனோஜ், முன்னாள் தி.மு.க. நகர செயலாளர் மா.விவேகானந்தன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story