கோவை ரெயில் நிலையத்தில் அரசு நிதி ரூ.70 லட்சம் வீண்

கோவை ரெயில் நிலையத்தில் வாகனங்களை ஸ்கேன் செய்யும் கருவியை பயன்படுத்தாததால் அரசு நிதி ரூ.70 லட்சம் வீணாகும் அவல நிலை உள்ளது.
கோவை
கோவை ரெயில் நிலையத்தில் வாகனங்களை ஸ்கேன் செய்யும் கருவியை பயன்படுத்தாததால் அரசு நிதி ரூ.70 லட்சம் வீணாகும் அவல நிலை உள்ளது.
ரெயில் நிலையம்
கோவை ரெயில் நிலையத்துக்கு தினமும் 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. இதனால் அங்கு ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்களின் வாகனங்கள் ரெயில் நிலையத்திற்குள் நுழைய பிரதான நுழைவு வாயில் மற்றும் பின்புறத்தில் உள்ள 2-வது நுழைவு வாயில் உள்ளது.
அந்த 2 இடங்களிலும் வாகனங்களின் கீழே ஆபத்தை விளை விக்க கூடிய பொருட்கள் ஏதும் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என்பதை அறிய ஸ்கேன் கருவி அமைக்கப்பட்டது.
இதன் மூலம் கோவை ரெயில் நிலையத்துக்கு வரும் வாகனங்கள், அந்த ஸ்கேன் கருவி உள்ள இடத்தின் மேல் நிறுத்தப்படுகிறது.
பயன்பாடு இல்லை
அப்போது அந்த வாகனங்களின் அடியில் ஏதும் பதுக்கி வைக்கப் பட்டு உள்ளதா என்பதை ஸ்கேனர் கருவியுடன் இணைக்கப்பட்ட கேமரா படம் பிடிப்பதை கணினியில் பார்த்து தெரிந்து ெகாள்ள லாம்.
இதன் மூலம் கோவை ரெயில் நிலையத்துக்கு வரும் வாகனங்களை எளிதாகவும், விரைவாகவும் கண்காணிக்க முடிந்தது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
ஆனால் அந்த ஸ்கேனர் கருவி பயன்பாட்டுக்கு வந்து சில மாதங்கள் மட்டுமே நல்ல முறையில் செயல்பட்டது. அதன்பிறகு ஸ்கேனர் கருவி பயன்படுத்தப்படாமல் உள்ளது.
ரூ.70 லட்சம் செலவு
இது குறித்து சேலம் கோட்ட ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சண்முகம் மற்றும் பயணிகள் கூறியதாவது:-
கோவை ரெயில் நிலையத்துக்கு வரும் வாகனங்களை ஸ்கேன் செய்ய கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.70 லட்சத்தில் ஸ்கேனர் கருவி அமைக்கப்பட்டது. அது செயல்பாட்டுக்கு வந்து 7 மாதம் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது.
அதன்பிறகு அந்த ஸ்கேனர் கருவி பயன்படுத்தப்படாமல் அப்படியே கிடப்பில் விடப்பட்டது. மேலும் வாகனங்களை ஸ்கேன் செய்யும் பணிக்கு ஊழியர்கள் யாரும் நியமிக்கப்பட வில்லை. இதன் காரணமாக வாகனங்களை ஸ்கேன் கருவி மூலம் சோதனை செய்வது நிறுத்தப்பட்டு உள்ளது.
நடவடிக்கை
இதனால் ரூ.7 லட்சம் செலவில் அமைத்த ஸ்கேன் கருவி பயன் பாடு இன்றி வீணாகும் அவல நிலை உள்ளது. எனவே ஸ்கேன் கருவியை பயன்பாட்டுக்கு கொண்டு வர ஊழியர்களை நியமிக்க வேண்டும்.
இல்லை என்றால் அந்த ஸ்கேன் கருவிகள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விடும்.
அதற்கு முன்னதாக ெரயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து ஸ்கேனர் கருவியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.