அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்கண் சிகிச்சை முகாம்


அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்கண் சிகிச்சை முகாம்
x
தினத்தந்தி 21 Oct 2023 12:15 AM IST (Updated: 21 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி, கோவில்பட்டி 14வது வார்டு தி.மு.க. மற்றும் சங்கரா கண் மருத்துவமனையும் இணைந்து கோவில்பட்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கண் சிகிச்சை முகாம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் தவமணி முன்னிலை வகித்தார். முகாமை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். முகாமில் டாக்டர் அனுராதா தலைமையில் வந்த மருத்துவ குழுவினர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் சந்திரசேகர், திமுக ஒன்றிய செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தானம், மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் அமலி அந்தோணி பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story