அரசு மேல்நிலைப்பள்ளிவிளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும்


அரசு மேல்நிலைப்பள்ளிவிளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும்
x

கோட்டூர் அருகே களப்பால் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கோட்டூர்:

கோட்டூர் அருகே களப்பால் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு மேல்நிலைப்பள்ளி

திருவாரூர்மாவட்டம் கோட்டூர் அருகே களப்பால் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் குலமாணிக்கம், குறிச்சிமூலை, களப்பால், வெங்கத்தான்குடி, திருக்களார், மீனம்பாநல்லூர், அக்கரைக்கோட்டகம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 450-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளியின் விளையாட்டு மைதானம் 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் தண்ணீர் தேங்கி செடி, கொடிகள் மண்டி வயல்வெளி போல காட்சியளிக்கிறது. இதனால் மாணவர்கள் விளையாட்டு மைதானம் இருந்தும் பயன்படுத்த முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே களப்பால் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிாியர் பணியிடங்கள்

இது குறித்து முன்னாள் மாணவர் ஆறுமுகம் கூறியதாவது:-

கல்வியை போல் உடற்கல்வியும் மாணவர்களுக்கு மிக அவசிய மாகும். பள்ளிகளில் உடற்கல்வியை கட்டாய பாடமாக்க வேண்டும். மாணவர்களுக்கு உடல்நலமும் மன நலமும் உடற்கல்வி மூலம் மட்டுமே ஏற்படுத்த முடியும். மேலும் மைதானத்தில் விளையாடுவது மூலம் தான் மாணவர்களின் தனித்திறமை வெளிப்படும்.

கிராமப்புற பள்ளிகளில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் இதற்கு உடற்கல்வி ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் விளையாட்டு மைதானத்தை சீரமைக்கவும் தரமான விளையாட்டு உபகரணங்கள் வழங்கவும் திருவாரூர் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறப்பு நிதி ஒதுக்க கோாிக்ைக

பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் எம். எஸ். ராஜேந்திரன் கூறியதாவது:-

களப்பால் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு களப்பால் ஊராட்சிக்கு சொந்தமான 70 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது . அப்போது அந்த இடம் சிறு சிறு குட்டைகளாக இருந்தது. பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில் நமக்கு நாமே திட்டத்தில் அந்த இடம் சமப்படுத்தப்பட்டது . அதன் பிறகு விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்தோம் .

ஆனால் இந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளையும் அரசு அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்து வருகிறோம். களப்பால் அரசினர் மேல்நிலைப் பள்ளிமாணவர்களின் நலன் கருதி கலெக்டர் நேரில் அரசிடம் சிறப்பு நிதி பெற்று இந்த விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story