அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தர்ணா
அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தர்ணா போராட்டம் நடந்தது.
ராமநாதபுரம்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களை பணி செய்ய விடாமல் தடுத்த மாநகராட்சி சுகாதார அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மகப்பேறு மருத்துவர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும்.
கூடுதல் மகப்பேறு மருத்துவர்கள் உடனடியாக பணியமர்த்தப்பட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி ராமநாதபுரத்தில் அரசு டாக்டர்கள் சங்க தலைவர் மலையரசு தலைமையில் தர்ணா நடைபெற்றது. இணை செயலாளர் அறிவழகன், மகப்பேறு பிரிவு தலைமை டாக்டர் ரமணீஸ்வரி, டாக்டர்கள் ஜெகப்பிரியா, நந்தினி, வகிதா, பாண்டி செல்வம், சந்தனகண்ணன், வள்ளி பிரியா, சிங்காரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story