எல்லோரும் உயர்கல்வி பயில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


எல்லோரும் உயர்கல்வி பயில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது  - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 30 Aug 2022 12:43 PM IST (Updated: 30 Aug 2022 3:54 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,இன்று பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்றது .

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,இன்று பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது .

இந்த மாநாட்டை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் தமிழகத்தில் இயங்கும் 21 பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில், உரையாற்றிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது ;

பல்கலைக்கழகங்களுக்காக ஆண்டுதோறும் ரூ.3,000 கோடி ஒதுக்கப்படுகிறது என்றார். இதுவே பல்கலைக்கழகங்கள் சிறப்பாக செயல்படக் காரணம் என கூறினார். உயர்கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற அவர், நீதிக்கட்சி ஆட்சியில் கல்விக்காக போட்ட விதையே இன்று கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உருவாக காரணம் என்றார்.

திராவிட ஆட்சியில் 19 பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் சீரான நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இந்திய அளவில் 35 தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன.தமிழகத்தில்தான் அதிகளவில் உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன.

பட்டப்படிப்புகளை உலக தரத்திற்கு நிகராக சீரமைக்க முயற்சி.எல்லோரும் உயர்கல்வி பயில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது மாநில அரசோடு இணைந்து பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் .உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு 51% பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும். உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி, கற்றல் – கற்பித்தல் போன்றவற்றில் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் சிறப்பாகவே உள்ளன. NIRF தரவரிசையிலும் நாம் தான் முதலிடம் என பெருமிதம் தெரிவித்தார். எண்ணிக்கை, தரம் என்ற இரண்டிலும் தமிழ்நாடு உயர்ந்துள்ளது என்பதை NIRF தரவரிசைப் பட்டியல் காட்டுகிறது.ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்த ஆண்டுதோறும் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்த ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்டம் செயல்படுத்தப்படும்.நீட் தேர்வுக்கு பயந்து அதை எதிர்க்கவில்லை. உயர்கல்விக்கு தடைக்கல்லாக இருக்கும் என்பதால் தான் அதை எதிர்க்கிறோம்என்றுஅவர் கூறினார்.


Related Tags :
Next Story