வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அரசு கொறடா கோவி.செழியன் பார்வையிட்டார்


வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அரசு கொறடா கோவி.செழியன் பார்வையிட்டார்
x

கொள்ளிடத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அரசு கொறடா கோவி.செழியன் பார்வையிட்டார் பொதுமக்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் கல்லணையை அடைந்து அங்கிருந்து காவிரி, கொள்ளிடம் பகுதிகளில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கின் காரணமாக கொள்ளிடம் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. விளைநிலங்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தமிழகஅரசின் தலைமை கொறடா கோவி.செழியன் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்த்தார். மேலும், கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே நின்று கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை பார்த்தார். பின்னர், கொள்ளிடம் ஆற்று தண்ணீர் கடலில் கலக்கும் இடமான பழையாறு துறைமுகம் வரை சென்று பார்வையிட்டார். பின்னர் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடம், கொள்ளிடத்தில் தண்ணீர் அதிகமாக செல்வதால் மேடான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். அப்போது கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் அன்பழகன், சிவபாலன், ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வகுமார், நேதாஜி மற்றும் பலர் உடன் இருந்தனர்.


1 More update

Next Story