அரசு பள்ளியில் கியாஸ் கசிந்து தீ


அரசு பள்ளியில் கியாஸ் கசிந்து தீ
x
தினத்தந்தி 2 Sept 2023 1:00 AM IST (Updated: 2 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளியில் கியாஸ் கசிந்து தீ

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி

கோவை அருகே அரசு தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டிக்காக அடுப்பை பற்ற வைத்த போது கியாஸ் கசிந்து அடுப்பில் தீ விபத்து ஏற்பட்டது.

கியாஸ் அடுப்பில் தீ

கோவை அருகே கொண்டையம்பாளையம் ஊராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த அரசு பள்ளியில் 22 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை 7 மணிக்கு வழக்கம்போல் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி சமைப்பதற்காக சமையல் பணியாளர் கவிதா வந்துள்ளார். பின்னர் கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் கியாஸ் அடுப்பில் தீ பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர் கவிதா சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறி உயிர் தப்பினார். அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர்.

குழாயில் கசிவு

இதுகுறித்து உடனே சமையல் பொறுப்பாளர் சித்ரா மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.

கியாஸ் சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் குழாயில் கசிவு இருந்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தகவல் அறிந்த பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.


Next Story