மெழுகுவர்த்தி ஏந்தி அரசு பள்ளி மாணவர்கள் அஞ்சலி
3 ரெயில்கள் ேமாதிய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அரசு பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
ஒடிசாவில் சென்னை கோரமண்டல் உள்பட 3 ரெயில்கள் மோதிய விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்தநிலையில் நேற்று பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலை பள்ளியில் ஒடிசாவில் 2 ரெயில்கள் மோதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மாணவ-மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தனர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story