விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

ஈரோடு

பவானி

பவானி அருகே உள்ள சிங்கம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நஞ்சன். அவருடைய மகன் வெள்ளிங்கிரி (வயது 42). இவர் கடந்த 2014-ம் ஆண்டு அந்தியூர்-அம்மாபேட்டை ரோட்டில், பூனாச்சி பஸ் நிறுத்தம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து அவர், பாதிக்கப்பட்ட தனக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்கக் கோரி பவானி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், விபத்தால் பாதிக்கப்பட்ட வெள்ளிங்கிரிக்கு ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 276 வழங்க வேண்டும் என போக்குவரத்துக் கழகத்துக்கு கடந்த 2022-ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், இழப்பீடு வழங்கப்படாததால், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுமாறு வெள்ளிங்கிரி நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இதில் இழப்பீடு வழங்காத போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பஸ்சை ஜப்தி செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து கோர்ட்டு ஊழியர்கள் பவானி பஸ் நிலையத்துக்கு சென்று அங்கு நின்றிருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.


Related Tags :
Next Story