அரசு கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க வேண்டும் : தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


அரசு கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க வேண்டும் : தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு சென்னை ஐகோர்ட்டு  உத்தரவு
x

அரசு கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க வேண்டும் என தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் மென்பொருள் நிறுவனத்தால் சட்டவிரோதமாக அரசு கேபிள் டிவி செயலிழப்பு செய்த விவகாரத்தில் அதன் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அரசு கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க வேண்டும் என தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் கேபிள் சேவையை துண்டிக்க கூடாது, மத்தியஸ்தர் மூலம் இந்த விவகாரத்தில் தீர்வு காணவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.




Next Story