கண்ணாடி உடைந்ததால் நடுவழியில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்
கண்ணாடி உடைந்ததால் நடுவழியில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்
திருப்பூர்
பொங்கலூர்,
திருப்பூரிலிருந்து பல்லடம், பொங்கலூர் மற்றும் அவினாசி பாளையம் வழியாக அரசு டவுன் பஸ் சென்று வருகிறது. இந்த அரசு டவுன் பஸ் நேற்று மதியம் ஒரு மணி அளவில் பொங்கலூர் வழியாக சென்று கொண்டு இருந்தது. அப்போது கள்ளிமேட்டுப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது பஸ்சின் முன்பக்க கண்ணாடி திடீர் என உடைந்து நொறுங்கி விழுந்தது. இதனால் மேற்கொண்டு பஸ்சை இயக்க முடியாமல் டிரைவர் அங்கேயே ஓரமாக நிறுத்தினார். இந்த பஸ்சில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனைத்தொடர்ந்து அந்த பஸ்சில் வந்த பயணிகளை மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். திடீரென கண்ணாடி உடைந்து விழுந்ததால் அரசு டவுன் பஸ் நடுவழியில் நின்ற சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Related Tags :
Next Story