கூடலூர் அரசு கால்நடை மருத்துவமனையில் டாக்டரை நியமிக்க வேண்டும்:விவசாயிகள் கோரிக்கை


கூடலூர் அரசு கால்நடை மருத்துவமனையில் டாக்டரை நியமிக்க வேண்டும்:விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அரசு கால்நடை மருத்துவமனையில் டாக்டரை நியமிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்ைக விடுத்தனர்.

தேனி

தேனி மாவட்டத்தில், கூடலூர் 2-ம் நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது. இந்த பகுதி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இங்கு மூன்றில் ஒரு பகுதியினர் விலை உயர்ந்த பால்மாடுகளை வளர்த்து பால் தொழில் செய்து வருகின்றனர். சிலர் விவசாய பணிகளுக்கு தேவையான உழவு மாடுகள் மற்றும் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்களது கால்நடைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு கூடலூர் தலைமை கால்நடை மருத்துவமனைக்குத்தான் செல்லவேண்டும். மருத்துவமனைக்கு சென்றால் அலுவலகம் பூட்டியே கிடக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு பணிபுரிந்த கால்நடை டாக்டர் இறந்து விட்டார். அதன்பிறகு டாக்டர் நியமிக்கப்படவில்லை. இதுகுறித்து விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து பெண் டாக்டர் நியமிக்கப்பட்டார். அவரும் திருமணத்திற்காக விடுமுறையில் சென்றுவிட்டார். தற்போது அவருக்கு பதில் தற்காலிக மருத்துவர் அவ்வப்போது வந்து செல்வதாகவும், கால்நடைகளுடன் வரும்போது அலுவலகம் பூட்டியே கிடக்கிறது என விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே மாவட்ட கால்நடை மருத்துவ துறையினர் கூடலூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு நிரந்தரமாக டாக்டரை நியமிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story