நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு ஜி.பி.எஸ் கருவிகள் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு ஜி.பி.எஸ் கருவிகள் - முதல் அமைச்சர்  மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின்  வழங்கினார்
x
தினத்தந்தி 8 Aug 2023 9:38 PM IST (Updated: 8 Aug 2023 9:41 PM IST)
t-max-icont-min-icon

நீர்வளத்துறை திட்ட உருவாக்கப் பொறியாளர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 5 பொறியாளர்களுக்கு அக்கருவிகளை வழங்கினார்.

சென்னை,

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 9 கோட்டங்களுக்கு 9 டி.ஜி.பி.எஸ் கருவிகளையும், 214 கையடக்க ஜி.பி.எஸ். கருவிகளையும் நீர்வளத்துறை திட்ட உருவாக்கப் பொறியாளர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 5 பொறியாளர்களுக்கு அக்கருவிகளை வழங்கினார்.

நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 9 கோட்டங்களுக்கு 9 டி.ஜி.பி.எஸ் கருவிகளையும் மற்றும் அப்பிரிவில் உள்ள அனைத்து உதவிப் பொறியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்களுக்கு 214 மடிக்கணினிகள், 214 கையடக்க ஜி.பி.எஸ் கருவிகள் வழங்கப்படுகின்றன. இந்த டி.ஜி.பி.எஸ் கருவிகள் செயற்கை கோள்களில் இருந்து சமிக்ஞைகளைப் பெற்று அதன்மூலம் இருப்பிடத்தை துல்லியமாக அளப்பதால், நீர்பாசன திட்டங்களான தடுப்பணைகள், ஏரிகள், நீர்தேக்கங்கள், கால்வாய்கள் போன்ற அமைப்புகளை அமைத்திட துல்லியமான நிலஅளவைகள் போன்ற ஆய்வு பணிகளை புவியியல் தகவல் அமைப்புடன் இணைந்து மேற்கொள்ள முடியும்.

வரைபடங்கள் மற்றும் மதிப்பீடுகள் தயாரிக்கும் பணிகளையும் பொறியாளர்கள் துரிதமாக மேற்கொள்ள முடியும்.


Related Tags :
Next Story