பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

நாகூரில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது

நாகப்பட்டினம்

நாகூர்:

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சிவவேலன் வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவர் செல்வம், மாவட்ட இணைச் செயலாளர் அரசமணி ஆகியோர் பேசினர். தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். எண்ணிக்கையிலும், ஊதிய விகிதத்திலும் அதிகமாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க புதிய அரசாணை வெளியிட வேண்டும். அனைத்து அரசு உயர்நிலை பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 8 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாநில இணை செயலாளர் சீதாராமன் மற்றும் வட்டார பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.


Next Story