கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பட்டதாரி பெண் விழிப்புணர்வு இருசக்கர வாகன பயணம்


கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பட்டதாரி பெண் விழிப்புணர்வு இருசக்கர வாகன பயணம்
x

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பட்டதாரி பெண் விழிப்புணர்வு இருசக்கர வாகன பயணம் மேற்கொண்டார்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

பெங்களூருவைச் சேர்ந்தவர் சித்ரா ராவ் (வயது 24), எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 'உங்கள் பெற்றோரை கைவிடாதீர்கள்' என்பதை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை விழிப்புணர்வு இருசக்கர பயணம் மேற்கொள்ள சித்ரா ராவ் முடிவெடுத்தார்.

அதன்படி நேற்று கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு பயணத்தை தொடங்கினார். இந்த பயணத்தை கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் சத்யகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி உதவி அலுவலர் துரை, நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் ஞான சந்திரன், ஒருங்கிணைப்பாளர் ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சித்ராவின் தாய் கவிதாவும் பங்கேற்றார்.

தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம், மத்திய பிரதேசம், அரியானா வழியாக 15 நாட்களில் 4 ஆயிரம் கிலோ மீட்டரை கடந்து காஷ்மீரை சித்ரா சென்றடைகிறார். வழி நெடுகிலும் உங்கள் பெற்றோரை கைவிடாதீர்கள் என்பதை வலியுறுத்தி மக்களிடம் பிரசாரம் செய்கிறார்.

--


Next Story