அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பட்டமளிப்பு விழா


அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பட்டமளிப்பு விழா
x

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பட்டமளிப்பு விழா நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 5-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.

மருத்துவமனை துணை முதல்வர் சங்கீதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலைய மருத்துவ அலுவலர் அரவிந்தன் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ், மருத்துவக்கல்வி இயக்குனர் சாந்திமலர் ஆகியோர் கலந்து கொண்டு 2017-ம் கல்வி ஆண்டு பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.

இதில் 100 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

இவர்களில் நிவேதிதா என்ற மாணவி சிறந்த மாணவராக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு 17 பதக்கங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் டாக்டர்கள், துறை அலுவலர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story