கிராமசபை கூட்டம்


கிராமசபை கூட்டம்
x

செங்கோட்டை அருகே கற்குடியில் கிராமசபை கூட்டம் நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள கற்குடி ஊராட்சியில் காந்திஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. கற்குடி ஊராட்சி மன்ற தலைவா் முத்துபாண்டியன் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலா் சங்கரநாராயணன், ஆணையாளா் பார்த்தசாரதி, வட்டார வளா்ச்சி அலுவலா் மாயவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பணி மேற்பார்வையாளா் செல்வம் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சுகாதார ஆய்வாளா் செந்தில்குமார், உதவி வேளாண்மை அலுவலா் குமார், கிராம நிர்வாக அலுவலா் தமிழ்செல்வி, ஆசிரியா் நல்லசிவன், ஊராட்சி மன்றத்துணைத்தலைவா் பாக்கியலெட்சுமி, உறுப்பினா்கள் வடகாசி, திருமலைக்குமார், குத்தாலிங்கம், வேல்விழி, பத்மாவதி, அம்பிகா, வசந்தகனி, வேலம்மாள் பாலமுருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் இசக்கி நன்றி கூறினார்

1 More update

Next Story