கிராமசபை கூட்டம்
கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை,
சுதந்திர தினவிழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், நாலுகோட்டை கிராமத்தில் ஊராட்சி தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு பேசினார்
விழாவில் மகளிர் திட்ட இயக்குநர் வானதி, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்.மணி பாஸ்கரன் உள்படபலர் கலந்து கொண்டனர். இதையடுத்து கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நடைபெற்ற பொது விருந்தில் கலெக்டர் கலந்து கொண்டு, பொதுமக்களுடன் சாப்பிட்டார்.
இதில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் என்.பழனிக்குமார் செயல்அலுவலர் நாராயணி உள்படபலர் கலந்து கொண்டனர். பின்னர் 103 வயதுடைய சுதந்திர போராட்ட தியாகி சேதுராமன் வீட்டிற்கு கலெக்டர் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்தார்.