காந்தி ஜெயந்தியையொட்டி கிராமசபை கூட்டம்


காந்தி ஜெயந்தியையொட்டி கிராமசபை கூட்டம்
x
தினத்தந்தி 3 Oct 2022 12:15 AM IST (Updated: 3 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

காந்தி ஜெயந்தியையொட்டி கிராமசபை கூட்டம் நடந்தது.

சிவகங்கை

காரைக்குடி,

காந்தி ஜெயந்தியையொட்டி கிராமசபை கூட்டம் நடந்தது.

கிராம சபை கூட்டம்

கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பனங்குடி கிராமத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராமசபை கூட்டம் நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டு ஊராட்சியில் மேற்கொண்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து பி.நடராஜபுரம் ராமசாமி நினைவு அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இதில் எம்.எல்.ஏ. செந்தில்நாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ரெத்தினவேல், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) தனபாலன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அழகுமலை, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் விஜய்சந்திரன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல், மாவட்ட சமூக நல அலுவலர் பரமேஸ்வரி, கல்லல் யூனியன் தலைவர் சொர்ணம் அசோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ, அழகுமீனாள், தாசில்தார் மாணிக்கவாசகம், ஊராட்சி மன்ற தலைவர் அருண் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கழுகேர்கடை ஊராட்சி

திருப்புவனம் யூனியனை சேர்ந்த கழுகேர்கடை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணை தலைவர் ரேவதி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார், திருப்புவனம் பேரூராட்சி தலைவரும், மாவட்ட தி.மு.க. துணை செயலாளருமான சேங்கைமாறன், திருப்புவனம் யூனியன் சேர்மன் சின்னையா, துணை சேர்மன் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் யூனியன் ஆணையாளர் அங்கையற்கன்னி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன், ஒன்றிய கவுன்சிலர் தஸ்லீம், பால்வள துணைப்பதிவாளர் செல்வம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வீரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் குடிநீர், சாலை, மின் விளக்கு உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலர் திருப்பதி நன்றி கூறினார்.

இளையான்குடி

இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் முத்தூர் கிராம ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி செல்வி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்பல்வேறு கோரிக்ககைள் குறித்து பேசப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முடிவில் ஊராட்சி செயலாளர் பாக்யராஜ் நன்றி தெரிவித்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சிமன்ற தலைவர் நாகமணிஅழகுமணிகண்டன் தலைமை தாங்கினார். துணை தலைவர் தேவிகா, ஒன்றிய கவுன்சிலர் பாக்கியலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக செயலர் வெள்ளைச்சாமி நிறைவேறிய திட்டங்கள், செய்யப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்தார். சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் துணை வட்டாட்சியர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலக மகளிர் நல அலுவலர் சக்தி, ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக வழங்கினர். இதில் முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் செல்வமணி, பன்னீர்செல்வம், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story