கிராமசபை கூட்டம்


கிராமசபை கூட்டம்
x

ஆலங்குளம் பகுதியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் காத்தம்மாள் பசுபதி ராஜ் தலைமையிலும், கீழாண்மறைநாடு ஊராட்சியில் பொன்னுத்தாய் சீனிவாசன் தலைமையிலும், அப்பயநாயக்கர்பட்டி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கணேஷ்குமார் தலைமையிலும், கொங்கன்குளத்தில் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஏ.லட்சுமிபுரம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் மகேஷ்வரி மகேஸ்வரன் தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அப்போது கிராம வளர்ச்சிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் டி.கரிசல்குளம் கல்லமநாயக்கர்பட்டி, காக்கிவாடன்பட்டி, எட்டக்காபட்டி, இ.டி.ரெட்டியபட்டி, குண்டாயிர்ப்பு, கங்கர் செவல், தொம்ப குளம், ஆர்.ரெட்டியபட்டி, சாமிநாதபுரம், கோபாலபுரம் ஆகிய பகுதிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


1 More update

Next Story